நடிகர்களின் பிரசாரத்திற்கு செல்வதால் அவர்கள் ஓட்டு வாக்காக மாறிவிடாது: செல்லூர் ராஜூ

நடிகர் – நடிகைகளின் பிரசாரத்திற்கு மக்கள் கூட்டம் கூடும். ஆனால், அந்த கூட்டமெல்லாம் வாக்காக மாறிவிடாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியனை ஆதரித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் அமைந்துள்ள ஜாக்கிங் கிளப்பில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மத்தியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்குசேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியில் இருந்தபோது, மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யாத காங்கிரஸ், இப்போது எப்படி செய்யும் என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version