தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ராமாயண இதிகாச தலங்களுக்கு செல்வதற்கு திருநெல்வேலியில் இருந்து மதுரை, சென்னை சென்ட்ரல், அயோத்தியா, ஹம்பி ஆகிய நகரங்கள் வழியாக சென்று மீண்டும் திருநெல்வேலிக்கு வரும் வகையில் அயோத்தியா எக்ஸ்பிரஸ் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மதுரை ரயில் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version