முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
உயர் நீதிமன்ற மதுரை கிளையானது கலைஞர் போட்ட பிச்சை என்று அமைச்சர் எ.வா.வேலு கூறியிருப்பதற்கு முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அமைச்சர் இப்படி கூறுவதெல்லாம் நல்லதல்ல, தான் ஒரு அமைச்சராக இருப்பது மக்கள் போட்ட வாக்குகளின் பிச்சைதான் என்பதை அமைச்சர் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த ஆட்சியே மக்கள் போட்ட பிச்சைதான்.
நிறைய வழக்குகள் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வருவதால் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைக்க வேண்டும் என்று குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்பேரில் 15,20 மாவட்டங்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைக்கப்பட்டது. மேலும் தக்காளி விலை உயர்வைப் பற்றி பேசிய அவர், தக்காளி விலை இவ்வளவு உயரம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரேஷன் கடைகளில் இவர்கள் 60 ரூபாய்க்கு விற்பனை செய்வது மக்களுக்கானதல்ல. இன்னும் விலையை சற்று குறைத்து விற்க வேண்டும்.
மேலும் மதுரையில் நடைபெறும்ம் மாநாடு குறித்து பேசிய அவர், வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது என்பதை பற்றி தான் ஆலோசனை மேற்கொண்டோம் அதுவும் என்னுடைய மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் கடுமையாக அதற்கான வேலைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
Discussion about this post