திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் விரைவில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இனி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் ஓட்டல்களிலும் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தங்கும் அறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண் குடுவை, செம்பு, கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு நிறுவனம் 40 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். சோதனை அடிப்படையில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் பாட்டிலை திரும்ப கொடுத்தால் 20 ரூபாய் திரும்ப வழங்கப்படுமென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.