முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியின் 9 அம்ச நடவடிக்கைகளை தமிழக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள், தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள் எதுவும் இயங்காது என்பதையும், மெட்ரோ ரயில்கள் இயங்காது என்பதையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அர்பணிப்பு உணர்வுடன் ஈடுபடும் அனைவருக்கும், பொது மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்து கொரோனா வைரஸ் நோயை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்க முதல்வர் அழைப்பு!
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: coronacoronaoutbreaksindiacoronavirusVijayabaskar
Related Content
ஓட்டேரி மயானத்தை மாற்றிய அதிசயம்..சாதனைப் பெண் எஸ்தர் சாந்தி..!
By
Web team
March 8, 2023
கொரோனா பற்றித் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு!
By
Web team
March 5, 2023
ஏய்..எப்புர்றா!...கொரோனாவிற்கு பயந்து மூன்று ஆண்டுகள் பூட்டிய வீட்டில் வாழ்ந்த பெண்!
By
Web team
February 23, 2023
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக திமுக கவுன்சிலர்கள் பேச்சு!
By
Web team
February 1, 2023
கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் சீனா!
By
Web Team
January 23, 2023