விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் சீதக்காதி. சமீபத்தில் பெருவெற்றி பெற்றுள்ள 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் பி.மேனன் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் 25-வது திரைப்படமான ‘சீதக்காதி’யில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

இந்நிலையில் ‘சீதக்காதி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. ’சுற்றும் புவி முற்றும்’ எனத் தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த பாடலை ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார்.

Exit mobile version