மறக்க முடியாத “ராம்-ஜானு” கதாபாத்திரம் – 1 year of "96"

கடந்த ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படம் “96”. விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பில் வெளியான இப்படத்தை ஒவ்வொரு காதலர்களும் கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக படத்தின் பின்னணி இசையும், “காதல் அந்தாதி” பாடலும் இன்றும் பலரின் ரிங்டோன்களாக வலம் வருகின்றன. 2018ல் அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் இன்றோடு ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக படக்குழு 1 year of “96” என்ற ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கடைசியில் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி-த்ரிஷா இணைந்து நிற்பது போல அதில் 1 year of “96” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

Exit mobile version