சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட 462 தேவாரம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் ஆய்வு பணி :
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில்கும்பாபிஷேகம் ஆனது வருகின்ற மே 24ஆம் தேதி நடைபெற உள்ளது.தற்போது கோவில் புறனமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,சீர்காழி மேற்கு கோபுரம் அருகே கோவில் உட்புறத்தில் யாகசாலை அமைக்க நேற்று ஜேசிபி எந்திரம் கொண்டு தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 50 பீடங்கள் 462 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டு கோவில் சிவன் சன்னிதி அருகே பாதுகாப்பறையில் வைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை பதிப்பக பிரிவின்கீழ் இயங்கும் திருக்கோவில் திருமடங்களின் ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நூலாக்க திட்டபணி குழுவை சேர்ந்த முனைவர் தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை மட்டுமே இன்று ஆய்வு செய்து வருகின்றனர், அப்பொழுது அவர்கள் தெரிவித்ததாவது இதுவரையில் தேவாரப் பாடல்கள் நூல்களாகவும், ஓலைச்சுவடிகளில் மட்டுமே கிடைக்கப்பெற்று வந்தது, முதல் முறையாக செப்பேடுகளில் தேவாரம் கிடைக்கப்பட்டுள்ளது அதுவும் அதிகளவில் கிடைக்கப்பட்டுள்ளது இங்கே இதுவே முதல் முறை என தெரிவித்தனர், முழு ஆய்வுக்குப் பிறகு எக்காலத்தை சேர்ந்த செப்பேடுகள் என தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர்.
இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து வைக்க வேண்டும் என்பதே தர்மயாதினம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் கருத்தாகும்.
– தினேஷ், சீர்காழி செய்தியாளர்.