நாகை மக்களவை மற்றும் திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகை மக்களவை மற்றும் திருவாரூர் சட்டபேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆனந்த், தேர்தல் பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே, மக்களவை தேர்தல் பொது பார்வையாளர் சிபி.நேமா ஆகியோர் பார்வையிட்டனர். வாக்கு மையத்திற்கு செல்ல முகவர்களுக்கு தனி வழிகள் மற்றும்
தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்களும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்தங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை பார்வையிட்டார்.
Discussion about this post