காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தைலம் மற்றும் மூலிகை காப்புகள் பூசப்பட்டு அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் அனந்தசரஸ் குளத்தை சுற்றிலும் வேலிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 300-க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரைக் காண குளத்திற்குள் இறங்க பக்தர்கள் முயற்சி செய்யலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு குளத்தை சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post