மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெறலாம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளன. இந்தநிலையில், இதுதொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்களின் தீர்ப்பில் முறைகேடுகள் நடைபெறலாம் என்னும் கருத்து தம்மை கவலையடையச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று கூறியுள்ள பிரனாப், ஜனநாயகத்தின் அடிப்படையை கேள்வி எழுப்பும் எந்த யூகத்துக்கும் நாம் இடம் தரக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தின் அரசமைப்பின் நேர்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post