சபரிமலையில் பம்பை, நிலக்கல்லில் 144 தடை உத்தரவு

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல தரப்பினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பலர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் சபரிமலை வரும் அனைத்து வாகனங்களையும் நிலக்கல் பகுதியில் போராட்டக்காரர்கள் சோதனை செய்து அதில் இளம் வயது பெண்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை செல்ல அனுமதிக்கின்றனர்.

இதற்கிடையே, செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களை குறிவைத்து கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் சிலர் காயம் அடைந்தனர். சக ஊழியர்கள் அவர்களை பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றி அழைத்து சென்றனர்.

சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இன்று முதல் 2 நாளைக்கு நிலக்கல், பம்மை மற்றும் சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version