நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஜனவரி மாதம் 29ஆம் தேதி தொடங்கியது.
பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் கட்ட கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று முதல் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஓய்வூதிய திருத்த மசோதா, கிரிப்டோ கரன்சி மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை இந்த தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post