தெற்காசிய நாடுகளில் நிலவும் மோசமான வானிலை மேலும் மோசமடையும் என்றும் அதனால் அந்நாடுகள் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் பருவநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தீவிர பருவமழை காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளத்தால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடம், உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ள பாதிப்பால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மனதை கனக்கச் செய்கிறது.
இந்த நிலையில், தீவிர வானிலை மாற்றங்களால் இனி வரும் ஆண்டுகளில் தெற்காசிய நாடுகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 மாதங்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளபாதிப்பு ஏற்பட்ட நிலையில், சீனாவில் கடுமையான வறட்சி நிலை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.