சமீபத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை பிறப்பித்தார். அதில் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு பதிலாக நந்தகுமார் ஐஏஎஸ் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நியமிக்கப் படுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி என்பது வேறு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி என்பது வேறு. ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இரண்டு பதவிகளையும் குழப்பி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பொறுப்பு என்பது அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி பின்னர் ஒவ்வொரு கட்டமாக பதவி உயர்வு பெற்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தின் அனைத்து தளத்திலும் அனுபவம் பெற்ற பிறகு உச்சபட்ச பொறுப்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பொறுப்பை வகிப்பார்கள். பதவி பிரிட்டிஷ் காலத்தில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது.
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் என்பது கடந்த ஆண்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பதவி. பள்ளிக்கல்வித்துறையின் ஒரு மேற்பார்வையாளராக ஆணையர் பதவி தோற்றுவிக்கப்பட்டது