இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தலைமறைவாகிவிட்டாரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்?

எங்க தாத்தாவும் அவங்க தாத்தாவும் நண்பர்கள், எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் , நண்பர்கள், நானும் அவரும் நண்பர்கள் என்று பெருமைபேசிக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல் வலம்வரும் பெஸ்ட் ஃப்ரெண்ட் காம்போ கொஞ்ச நாளாக சைலண்ட் மோடில் இருக்கிறது.. யாருங்கோ அவுங்க? என்று கேட்கிறீர்களா? அட நம் விளையாட்டுத்துறையும், பள்ளிக்கல்வித்துறையையும் தான் சொல்கிறோம்.. உதயநிதியும் அன்பில் மகேஸ்-ம் உயிரும் உடலும்போல, நகமும் சதையும் போல போகிற இடங்களில் எல்லாம் கூடிக்கூடியே சென்றார்களே இப்போது எங்கே ஆளையே காணவில்லையே ?

உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக சீறும் சிறப்புமாக பணியாற்றிய காரணத்தால் அன்பில் மகேஸ்க்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியை பரிசளித்த ஸ்டாலின், அவர் எப்படி அமைச்சர் வேலையை பார்க்கிறார் என்று தெரியவும் இல்லை கவனிப்பதும் இல்லை.. அதனால்தான் அவ்வப்போது ஆப்சண்ட் ஆகி தன் சொந்த வேலைகளை பார்க்க போய்விடுகிறார் அன்பில்…

ஆனால், அங்கே பள்ளிக்கல்வித்துறையிலோ ஒருபக்கம் மாணவர்கள் பாழாய் போய்க்கொண்டிருக்க, இன்னொருபக்கம் ஆசிரியர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .. கஞ்சா, குடி, கூல் லிப் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, ஸ்கூலை கட் அடித்துவிட்டு எங்கேயோ சென்றுவிடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் முயன்றால், அங்கே அவர்களுக்கும் செக்…

இன்னொரு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் இழுத்தடிப்பு, கொடுத்த சைக்கிளும் காயலாங்கடைக்கு போகுமளவுக்கு மோசம்.. அட காலை சிற்றுண்டி என்று சொன்னார்களே அதாவது சாப்பிடும் அளவிற்கு இருக்கிறதா? அதுவும் இல்லை… அட நல்லாவே இருந்தாலும், பட்டியலினத்தவர்கள் சமைத்த உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று போராடும் பெற்றோர்.. எப்பப்பா… இன்னும் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்…

அட மாணவர்களைத்தான் நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் இருக்கிறார்களே அவர்கள் நிலை என்ன என்று யோசிக்கலாம்.. அது இன்னும் அந்தோ பரிதாபம் தான்… மாணவர்களுக்கு கற்பிக்கும் நேரத்தை விட, ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சித் திட்டம் என்ற பெயரில் அவர்களை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு…

ஆக மொத்தத்தில், நிறுத்திவைத்திருக்கும் லேப்டாப் திட்டத்தை மாணவர்களுக்கு எப்போது கொடுக்கப்போகிறார்? அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், மாணவர்களின் நலனை காக்க எதுவும் செய்யாமல் அப்படி என்னதான் செய்துகொண்டிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? நடிப்பதையே நிறுத்திய உதயநிதியின் ரசிகர் மன்றத்தில் யாருக்கு டீ ஆத்திக்கொண்டிருக்கிறார் மகேஷ் பொய்யாமொழி? ஒருவேளை தஞ்சாவூரிலேயே தலைமறைவாகிவிட்டாரோ அமைச்சர் அன்பில் மகேஸ் என்றுதான் அனுதினமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

 

Exit mobile version