அங்கீகராமின்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள், தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இது போன்ற பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை, பெற்றோர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கி பத்திரிகை செய்தி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டால், உரிய பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மதுரவாயலில் உள்ள வி.என்.ஆர் விவேகானந்தா வித்தியாலயா மற்றும் நாராயணா இ டெக்நோ பள்ளிக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வரும் ரவீந்திர பாரதி குளோபல், எர்ணாவூரில் உள்ள விவேகானந்தா வித்தியாலயா, திருவெற்றியூரில் உள்ள வேலம்மாள் நியூ ஜென், வளசரவாக்கத்தில் உள்ள லாமெக் தொடக்கப்பள்ளி மற்றும் ஆச்சார்யா தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post