தர்மபுரி காந்தி நகரை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பிரகதீஸ்வரன். வயது 14. தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு மாணவன் பிரகதீஸ்வரன் பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனிடையே மாணவனின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மாணவனின் தந்தை ராஜா தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, செல்போன் எண் மூலம் குற்றவாளியை போலீசார் கண்டு பிடித்து, மாணவனை மீட்டனர். மாணவனை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியதாக ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திரைப்படத்தை பார்த்து, இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
Discussion about this post