சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இதேபோல் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து செய்தனர்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.