சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்திய விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சிபிஐ அதிகாரிகளை பணி செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜராகாததால், அவர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்ற போது, அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மேற்குவங்க காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். இதனையடுத்து மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகளை பணி செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version