மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் உற்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்த பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்தனர்.
மாநிலங்களுக்கு சீராக நிதி ஒதுக்கீடு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். மேலும் நீதித்துறை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவினத்தை 60க்கு 40 என மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.