ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சாவின் குடியுரிமையை சவுதி அரேபிய அரசு ரத்து செய்துள்ளது.
ஒசாமா பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசராகவும் பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை, கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இரட்டை கோபுர தாக்குதலில் தந்தையுடன் இணைந்து ஹம்சா செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஹம்ஸா பின்லேடன் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்ததுள்ளது.
இந்தநிலையில், ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்துசெய்து சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.