சவூதியில் அக்சய் குமார் நடித்த கோல்ட் படம்

சவூதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை அண்மையில் நீக்கப்பட்டதையடுத்து, புதிய திரையரங்குகள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில், திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர், இந்தி நடிகர் அக்சய் குமார், மவுனி ராய், குனால் கபூர் ஆகியோர் நடித்த கோல்ட் திரைப்படம் சவூதியில் முதல் படமாக வெளியாகி உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், கடந்த 15ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. சவூதி அரேபியாவில் இந்த திரைப்படம் வெளயானதன் மூலம், அங்கு வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற கூடுதல் பெருமையை கோல்ட் படம் பெற்றுள்ளது.

Exit mobile version