கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்ப்டுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு நான்கு மணிநேரமானது பற்றாக்குறை ஏற்படும் நிலையானது உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாட வகுப்புகள் நடத்துவதற்காக சனிக்கிழமைகளிலும் பாட வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வரும் மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இல்லாமல் இயங்க உள்ளது. அதற்கான நடவடிக்கையினை இந்த விடியா திமுக அரசு ஏன் எடுக்காமல் தட்டி கழிக்கிறது என்று ஆசிரியர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 40,000 கோடி ஒதுக்கத் தெரிந்த அரசுக்கு, தலைமையாசிரியர்களையும் 12,000 ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு ஏன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டிற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு கடிதங்கள் அனுப்பியும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 247 மாணவர்களின் கனவினை சிதைத்து இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. திறனற்ற அரசாக செயல்படும் திமுகவினால் மாணவர்களின் கல்வித்தரம்., விளையாட்டுத் திறன் போன்ற பல திறமைகள் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.