சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். சாத்தான்குளம் மரண வழக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தானர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பால்துரைக்கு சர்க்கரை அளவு அதிகரித்து வருவதாகவும், இதயக்கோளாறும் இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி அவரது மனைவி, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதற்கு அனுமதி வழங்கப்பட்டு பால்துரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.
Discussion about this post