சர்க்கார் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்க்கார்.  திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இப்படத்தின் படப்பிடிப்பு  ஒருவாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  அமெரிக்காவின் லாஸ்வேகாசில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பாடல் காட்சி ஒன்று  படமாக்கப்பட்டு வருகிறது. இதனிடையே படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
Exit mobile version