கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக, கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தை அடுத்து, ராஜீவ் குமாரை கைது செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், அவரிடம் விசாரனை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து சிபிஐ ஆதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் மேற்கு வங்க மாநிலம் ஷில்லாங்கில் வைத்து விசாரனை நடத்தினர்.

இந்த நிலையில், ராஜீவ் குமார் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ராஜீவ் குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், திங்கட்கிழமை சிபிஐ முன் ஆஜராகுமாறு ராஜிவ்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜீவ் குமார் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்புத் தகவல் நிலவுகிறது.

Exit mobile version