இந்த உலகில் தன்னம்பிக்கைக்கு நிகரான ஒரு சக்தி என்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி உண்மையான காதல் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் அதன் எல்லையை தேடிச் செல்லும் என்று சொல்வார்கள். மேலும் ஒரு மனிதனுக்கு காதலும் தன்னம்பிக்கையும் சேர்ந்து இருந்தால் அவரது வாழ்வில் அவர் அடையக்கூடிய லட்சிய இலக்கானது மிக உயரமானது. மேலும், பிறப்பால் ஊனமுற்று விமர்சனங்களால் மனதளவில் ஊனமாகி தனது தன்னம்பிக்கை மற்றும் காதலின் மூலம் இந்த உலகில் வெற்றியை அடைந்த பிரபலங்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்சமயம் ஒரு பெண் பிரபலத்தை பற்றி பார்க்க உள்ளோம். ஆம், பெரும்பாலும் இந்த உலகில் பெண்கள் என்றாலே அவர்கள் முன்னேற்ற பாதையில் ஏகப்பட்ட தடைகளும் சிக்கல்களும் வதந்திகளும் விமர்சனங்களும் பரவி வந்து அவர்களை முன்னேற்றம் அடைய விடாமல் செய்யும் என்று நாம் அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
தடை அதை உடை:
அப்படி இருக்கையில் பிறப்பால் கைகள் இல்லாமல் பிறந்து வளர்ந்து வரும் காலங்களில் பல நபர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி மனதளவில் ஊனமாகி இருந்த ஒரு பெண்மணி தான் சப்திகா அவர்கள். இவர் இலங்கையை சேர்ந்த பெண்மணி ஆவார். மேலும் இவர் பிறந்த பிறகு இவரது பெற்றோரிடம் பலர் சென்று இப்படி ஊனமுற்ற ஒரு பெண்ணை வளர்ப்பது மிகவும் கடினம் அதனால் நீங்கள் இந்த குழந்தையை ஏதேனும் ஒரு அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுங்கள் என்று பலர் கூறி இருக்கிறார்கள் . ஆனால் அவரது பெற்றோர் தனது குழந்தையின் மேல் வைத்த பாசத்தினால் அந்த குழந்தையை முழு மனதுடன் வளர்த்து வந்தனர் . மேலும் சப்திகா அவர்கள் தனது சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பல கேள்விகளையும் கிண்டல்களையும் மனதில் விதைத்து கொண்டு கைகளால் செய்ய முடிந்த ஒரு விஷயத்தை கால்களால் செய்ய வேண்டும் என்று எண்ணி அதை உறுதிப்படுத்திக் கொண்டு அதற்காக நித்தமும் பாடுபட்டார். அப்படி அவர் சிறுவயதிலேயே தேர்ந்தெடுத்த ஒரு துறை தான் இசை மேலும் இவருக்கு சிறுவயதில் இருந்த இசையின் மீது தீராத காதல் இருந்து கொண்டே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அவரது தன்னம்பிக்கையும் அவரது இசை மீது கொண்ட காதலும் அவரை மிகப் பெரிய அளவில் மாற்றி உள்ளன . அவர் தனது கால் விரல்களை கொண்டு இசையமைத்து பாடல் வரிகள் அமைத்து பாடல்களை பாடி ஒரு இசை கலைஞராக தன்னை உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறார். மேலும் இவர் இந்த நிலைக்கு வருவதற்கு இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இவருக்கு பக்க பலமாக நின்று இவரது இந்த சாதனைக்கு வழி வகுத்து இருக்கிறார்கள் என்று பெருமையுடன் கூறி வருகிறார். இவரது இந்த செயலை பார்த்து உலகத்தினர் அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் . மேலும் உலகமே அறியும் வகையில் மிகப்பெரிய ஒரு இசை கலைஞராக ஆவது தனது லட்சியம் என்று அவர் வாழ்ந்து வருகிறார். மேலும் கால்களை கொண்டே அனைத்து பணிகளையும் செய்து வருகிறார் நம்பிக்கை நாயகி சக்திகா அவர்கள். இவரது இந்த ஆசை நிறைவேற வேண்டுமென்று அவரை நாமும் வாழ்த்துவோமே.
Discussion about this post