சபரிமலை மலையில் நடைபெறும் நிறைபுத்தரிசி விழாவிற்கு தமிழகத்தில் இருந்து நெற்கதிர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கோட்டைவாசலில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் முன் தமிழக, கேரள பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நிறை புத்தரிசி பூஜை வழிபாடு நாளை நடக்கிறது. இந்த விழாவிற்காக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில், கேரள மாநிலம் அச்சன் கோயிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து 51 பக்தர்கள் 51 நெற்கதிர் கட்டுகளை எடுத்து சென்றனர்.
சபரிமலை கோவில் நிர்வாகத்தினரும், ஐயப்பன் ஆபரண பெட்டி வரவேற்பு குழுவினரும் அவர்களுடன் செல்கின்றனர். நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்திற்கு கோட்டை வாசலில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் முன்பு தமிழக, கேரள பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.