நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பருவமழை முடிந்ததையடுத்து உப்பு உற்பத்தியில் உப்பளத்தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக இப்பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வருடத்திற்கான பருவமழை முடிந்துள்ள நிலையில், உப்பளங்கள் முழுமையாக சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் உப்பளங்களில் இருந்து உப்பினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post