சேலம் மாநகராட்சி முதன்மை பொறியாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 40 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சேலம் மாநகராட்சி முதன்மை செயற் பொறியாளராக பணியாற்றி வரும் அசோகன் தனது குடும்பத்தினருடன் பொன்னம்மாபேட்டையில் வசித்து வருகிறார். இவர் அரசு வேலையாக சென்னை சென்றுள்ளார். இவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலிருந்து வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அசோக் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 40 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடவர்களை மோப்ப நாய் அடையாளம் காண கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீட்டு வாசல் முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு சென்றுள்ளனர். மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒயர்களை அறுத்துவிட்டு, ஹார்டு டிஸ்க்குகளை திருடி சென்றுள்ளனர்.
Discussion about this post