சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் விமான நிலையம் திறப்பு விழா, அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் 1993-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டு சில நாட்கள் மட்டுமே விமான போக்குவரத்து நடைபெற்றது. இந்நிலையில் சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு உதான் திட்டத்தை கொண்டு வந்தது.
இதையடுத்து தமிழக அரசின் தீவிர முயற்சியால் சென்னையிலிருந்து சேலத்திற்கும் சேலத்திலிருந்து சென்னைக்கும் விமான சேவை இயக்க அனுமதியளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 25 ந் தேதி சேலத்தில் இருந்து விமான சேவை நடைபெற்று வருகிறது.
Discussion about this post