இறகு பந்தாட்டத்தில் சிகரம் தொட்ட சாய்னா நேவால்..!

டென்னிஸ் விளையாட்டிற்கு சானியா மிர்சா போன்று ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியர்கள் அனைவரின் நெஞ்சிலும் வாகை சூடி அமர்ந்திருந்தவர் இறகு பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால். இவர் மார்ச் 17 1990 ஆம் ஆண்டு அரியாணா மாநிலத்தில் பிறந்தவர். உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவர்தான். 2012 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேவிற்கு பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவர்தான். அவர் பிறந்தநாளான இன்று அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

Exit mobile version