டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் பங்கேற்றார். இவர், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.
ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சாய்னா நேவால் முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டில் 21-17 என்ற கணக்கில் அகானே யமாகுச்சியை வீழ்த்திய சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Discussion about this post