லஞ்சம் இல்லாத இந்தியாவை உருவாக்கவே விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் சோதனை – மத்திய அமைச்சர்

லஞ்சம் இல்லாத இந்தியாவை உருவாக்கவே விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் சிலர் போக்குவரத்து பிரிவு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ போலீசார், விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தியது. இதில், அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, விளையாட்டு ஆணைய அதிகாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், லஞ்சம் இல்லாத இந்தியாவை உருவாக்கவே விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். முற்றிலும் லஞ்சம் ஒழிக்கப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version