மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, இன்றுமுதல் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காகவும், தமிழ் மாதத்தின் புரட்டாசி மாத பூஜைக்காகவும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து தீபம் ஏற்றி வழக்கமான பூஜைகளை செய்தார்.
கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 21ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்ததற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பூஜையின் ஐந்து நாட்களும் இரவு 7 மணிக்கு படிப்பூஜை நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post