விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்துவைத்து தீபாராதனை நடத்துவார். இன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், நாளை வழக்கம்போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டள்ளது. 14ம் தேதி விஷு பண்டிகையை முன்னிட்டு கனிகாணுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post