உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே, முறைப்படி பதவியேற்று கொண்டார்.

தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் நேற்றுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்று கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.ஏ.பாப்டேவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Exit mobile version