ரஷ்யாவின் உயரிய விருதான புனித ஆண்ட்ரூ விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உலக நாடுகள் அனைத்துடனும் சமரச போக்கை பிரதமர் மோடி கடைபிடித்து வருகிறார். இதையொட்டி, வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகச்சிறந்த குடிமகனுக்கான ஜாயத் விருது மோடிக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயத் அல் நஹ்யான் கடந்த 4ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான புனித ஆண்ட்ரூ விருது வழங்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மேம்பட மோடி மேற்கொண்ட பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளதாக ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post