சைபீரியாவில் ஏற்பட்ட காட்டுதீயை அணைக்க ரஷ்ய வான்வழி பாதுகாப்பு அதிகாரிகள் மேக விதைப்பைத் தொடங்கி செயற்கை மழை பொழிவித்தனர்.
சைபீரியா முழுவதும் தற்போது 2.8 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 300-க்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. பெரும்பான்மையான பிளேஸ்கள் இர்குட்ஸ்க் மற்றும் கிராஸ் நோயார்ஸ்க் பகுதிகளில் அமைந்துள்ளன. முழுவதும் பரவியுள்ள காட்டு தீயை தடுக்க செயற்கை மழை பொழிவிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி ரஷ்ய வான்வழி வன பாதுகாப்பு சேவை அதிகாரிகள் ஆன் 26 விமானத்தை பயன்படுத்தி செயற்கை மழை விதைக்க தொடங்கினர்.
கணினி நிரலை பயன்படுத்தி தீ பற்றி எரியும் இடங்களை அவர்கள் தரையில் இருந்து தீர்மானித்து, அதனடிப்படையில் விமானங்களை பறக்கவிட்டு, ஆன் 26 விமானத்தில் நேவிகேட்டர் செர்ஜி ஸ்டெப் லெவ்ஸ்கி மூலம் செயற்கை மழையை உருவாக்கினர். இதன் மூலம் இர்குட்ஸ்க் பகுதிகளில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டதாக எஃப்.எஸ்.ஏ.வின் துணைத் தலைவர் டிமிட்ரி செலின் தெரிவித்தார்.
Discussion about this post