தன்வினை தன்னைச் சுடும்! ரஷ்யாவில் வலுக்கும் உள்நாட்டுக் கிளர்ச்சி! புதினுக்கு புதிய நெருக்கடி!

உலக நாடுகளில் பலம் வாய்ந்த நாடாக வலம் வந்து கொண்டிருப்பதில் ரஷ்யாவும் முக்கியமான நாடாகும். தற்போது ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டு வருவதால், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு உக்ரைன் மீது போற் தொடுத்ததும் ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்கிறது. ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஈவ் ஜெனிபிரிகோஸின் என்பவர் அதிபர் புதினின் நெருங்கிய நண்பராவார்.

உக்ரைன் போரின்போது, ஈவ் ஜெனிக்கும் ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசி மோவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. வாக்னர் ஆயுதக் குழு அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவத்தில் இணைய வேண்டும் என்று தலமை தளபதி வாலரி ஜெரசிமோவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஈவ் ஜெனி ஏற்கவில்லை. இதனால் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க ரஷ்ய ராணுவம் மறுத்தது. இதற்கு இடையே உக்ரைனில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய வீரர்களை ஈவ் ஜெனி காட்டிக் கொடுத்துவிட்டார் என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இதனால் உக்ரைனில் உள்ள பாக்மத் பகுதிஉயில் முகாமிட்டிருந்த வாக்னர் ஆயுதக் குழு வீரர்கள் மீது ரஷ்ய ராணுவம் அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான வாக்னர் தன் படைகளுடன் சேர்ந்து ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை கைப்பற்றினார். இதனிடையே, தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் புதின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையை பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதற்கு பதிலடி தரும் வகையில் டெலிகிராமில் ஒரு ஆடியோவை வெளியிட்ட ப்ரிகோஸின், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.

 

Exit mobile version