வந்தவாசி அருகே உள்ள கிராமத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி 79 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மடம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடை ஊழியர்கள் சிவக்குமார், ஏழுமலையிடம் இருந்து 79 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வந்தவாசி – சேத்துப்பட்டு நெடுஞ்சாலை மடம் கூட்டுச்சாலை அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் காவல் துறையினர் நடத்திய சோதனையில், டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி 79 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Discussion about this post