விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 73 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் வங்கி ஏடிஎம்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆயினும் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்டதால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Discussion about this post