ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே காரில் வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத 7 லட்சத்து 8 ஆயிரத்து 220 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
Discussion about this post