தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்திலும் விமானங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக 600 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலையங்களின் தென் மண்டல இயக்குனர் ஸ்ரீகுமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் வந்து செல்கின்றன. ஆனால் துறைமுக நகரமான தூத்துக்குடியில் 24 மணி நேரமும் விமானங்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்தநிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தனியார் விமான போக்குவரத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post