ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 48 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை ஆன நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மாசிப் பட்டம் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்த 2 ஆயிரத்து 500 மூட்டை பருத்தியை விற்பனைக்காக அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இங்கு நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்ச விலையாக கிலோ 57க்கு ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தமாக 48 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. வெளி சந்தையை விட வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூட்டைக்கு கூடுதலாக 3 ரூபாய் வரை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Discussion about this post