மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3 ஆயிரத்து 386 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, 816 கோடியே 41 லட்சம் ரூபாய் ரொக்கம், 279 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரத்து 253 கோடியே 50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களும், 980 கோடி மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், ஆயிரத்து 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 225 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.