முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக உட்கட்டமைப்பை மேம்படுத்த 289 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு பார்வையிட்ட கட்டமைப்புகளை பற்றி விவாதிக்கப்பட்டது. அதேபோன்று உயர்தரமிக்க உள்கட்டமைப்புகளை தமிழகத்தில் எற்படுத்துவதன் அவசியம் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
இதன் மூலம் அதிக முதலீடுகளை உள்கட்டமைப்புக்கு ஈர்த்து வேலை வாய்ப்பை பெருக்க அறிவுரை வழங்கினார். சென்னை நிதி தொழில்நுட்ப நகரம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சித் திட்டம், சென்னை ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிட மேலாண்மை திட்டம், புதிய முதலீடுகளை ஈர்த்தல், அரசு போக்குவரத்துக்கழக பேருந்து பணிமனைகளை நவீனப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்க 289 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Discussion about this post