நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த சோதனையில் நாடு முழுவதிலும் இருந்து இதுவரையில் 2 ஆயிரத்து 628 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் பறக்கும்படை நடத்திய சோதனையில், இதுவரை 2 ஆயிரத்து 628 கோடி ரூபாய் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு புகார் வந்ததன் அடிப்படையில் தேர்தல் நடத்த முடியாத தொகுதிகள் குறித்து விரிவான அறிக்கை அனுப்பவும் தமிழக தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post