தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பகுதியில் தனி வட்டாட்சியர் இளவரசி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் இருப்பதும் இந்த பணம் தனியார் வங்கிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Discussion about this post